Showing posts with label நடப்பு. Show all posts
Showing posts with label நடப்பு. Show all posts

January 20, 2017

என்னதான் நடக்கிறது

என்னவெல்லாம் நடக்கிறது
என்னவெல்லாமோதான் நடக்கின்றன
எல்லாமும்தான் நடக்கின்றன
யார் யார் இருக்கிறார்கள்
யார் யாரோதான் இருக்கிறார்கள்
யார் யாரோ இல்லைதான்
எல்லாரும் இருக்கிறார்களா
எல்லாரும்தான் இருக்கிறார்கள்
எல்லாரும் இல்லைதான்
என்னவெல்லாம் எதிர்நிற்கிறது
என்னவெல்லாமோதான் எதிர்நிற்கின்றன
எல்லாமும் எதிர்நிற்கின்றனதான்
எல்லாரும் எதிர்நிற்கிறார்களா
எல்லாரும் எதிர்நிற்கவில்லைதான்
எதிர்நிற்போர் எல்லாருமாக இல்லைதான்
என்னதான் நடக்கிறது
எல்லாமும்தான் நடக்கின்றன
என்னவெல்லாமோவும்தான்.

20.01.2017