Showing posts with label யாழன்ஆதி. Show all posts
Showing posts with label யாழன்ஆதி. Show all posts

September 25, 2011

பரமக்குடி தலித் படுகொலைகள் - கருத்தரங்கம் : ஒலிப்பதிவு

பரமக்குடி தலித் படுகொலைகளைக் கண்டித்துப் பறை விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் 24.09.2011 அன்று மாலை ஆறு  மணியளவில் சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. சுகிர்தராணி, யாழன் ஆதி, கரிகாலன் உள்ளிட்ட தோழர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

முன்னதாக புத்தர் கலைக் குழுவினரின் பறையிசை மற்றும் தலித் விடுதலைப் பாடல்கள் இசைக்கப்பட்டன. கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தவர்களைக் கவிஞர் கரிகாலன் வரவேற்றார். முறையே ச.பாலமுருகன், எவிடென்ஸ் கதிர், ஓவியா, புகழேந்தி, பேரா.கல்யாணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவிஞர் சுகிர்தராணி நன்றி கூறினார்.

கவிஞர் யாழன் ஆதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவை இரு விதங்களில் கீழே காண்க.

mp3 வடிவில்...


.
mp3 வடிவில்...




( ஒலிப்பதிவு : யுவபாரதி )