Showing posts with label இரும்பொறை. Show all posts
Showing posts with label இரும்பொறை. Show all posts

October 14, 2013

இரும்பொறை

என்னை
நிலவறைக்குள் தள்ளிப் பூட்டி
அவ்வப்போது குரல் கொடுக்கிறாய்

தொலைத்துவிட்ட திறவுகோலை
எப்போதேனும் தேடுகிறாய்

தரைமேல் நிகழும்
மிகுநடையை கூக்குரலை
அதிர்வுகளாய் உணர்கிறது செவி

இருள் பழகிவிட்டதால்
கண்களுக்கு மிரட்சியில்லை

உடல் அழுக்கில் புதைந்து
தாடியும் சிக்குப் பிடித்துவிட்டது

- யுவபாரதி