Showing posts with label யவனிகா ஸ்ரீராம். Show all posts
Showing posts with label யவனிகா ஸ்ரீராம். Show all posts

January 14, 2017

ஞான இலையாவது

நகுலன்
எப்போதுமே ஞானஸ்தன்
பழனிவேளும் சிவசங்கரும்
சட்டமாய் உட்கார்ந்து
பேசுகையில் ஞானம்
பெற்று விடுகிறார்கள்
நள்ளிரவில் நாலுபேரிடம்
வதைபடுகையில்
யவனிகா ஸ்ரீராமுக்கும்
ஞானம் கூடிவிடுகிறது
சண்டைக்குப் போகும்போதெல்லாம்
ஞானவாளோடே போகிறான்
இளங்கோ கிருஷ்ணன்
மரத்துக்கு மரம் உலுக்கியும்
ஒரு ஞான இலையாவது
உதிர்கிறதா நமக்கு.

09.01.2017