Showing posts with label வலி. Show all posts
Showing posts with label வலி. Show all posts

January 20, 2017

என்பதால் சொல்லவில்லை

யாருக்காகவும் எதன்பொருட்டும்
யாரும் சாகாதீர்கள்
யாருக்காகவும் எதன்பொருட்டும்
யாரையும் கொல்லாதீர்கள்
எனக்கு வலிக்கிறது
என்பதால் மட்டும் சொல்லவில்லை.

18.01.2017

January 18, 2014

நிழல் வலி


வெளியே 

பயண நேரத்து நாய்க்குட்டி
முதுகும் நிமிராது
குரைக்கவும் கூடாது

உள்ளே 

உபரி நேரத்து ஓய்வறை
எங்கும் நகராது
எதிரொலிக்கவும் சுடாது


- யுவபாரதி