Showing posts with label சாவி. Show all posts
Showing posts with label சாவி. Show all posts

February 05, 2014

இவையும் காட்சிகள்



1


கரிக்குருவி எதுவென்றாய்
காட்டுவதற்குள் பறந்துவிட்டது
வேப்பமரமெல்லாம் காகம்.


2


என்னை அடைத்த வீடு
வாசலில் சாவி தேடுகிறாய்
கடலில்தானே எறிந்தாய்


3


இருப்பவனை உயிரோடு
புதைத்து மறந்தீர்
இறந்தவர்களோடு எழுந்து வருகிறான்.


- யுவபாரதி