Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

January 27, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 11


காலில் காயம்
வெளியில் செல்வதே இல்லை
என்கிறாய்

என்
இதயத்திற்குள் மட்டும்
எப்படி வருகிறாய்?

- யுவபாரதி

எப்போதோ எழுதிய கவிதை : 10


மௌன மேகம்
கலை

இதயவானில்
நட்சத்திரங்கள்
பூக்கட்டும்.


- யுவபாரதி

எப்போதோ எழுதிய கவிதை : 9


மௌனம் சுமக்கிறாய்
கதறுகிறேன்

பேசத் துவங்குகிறாய்
ஊமையாகிறேன்.


- யுவபாரதி

எப்போதோ எழுதிய கவிதை : 8



உன் மௌனத்தில்
என் வார்த்தை
கவிதையாகிறது

உன் புன்னகையில்
நானே
கவிதையாகிறேன்.


- யுவபாரதி

January 26, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 7


விழுதுகளை இறைக்கிறேன்
கவிஞன் என்கிறாய்

உன் மௌனத்தில்
புதைந்திருக்கிறது
என் ஆலவிதை.


- யுவபாரதி

எப்போதோ எழுதிய கவிதை : 6



உதாசீனம் செய்கிறாய்

வெட்கமற்றது
என் மனம்

உன்னையே தியானிக்கிறது.


- யுவபாரதி

January 25, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 5



சித்ரவதை
உன் மௌனம்

பேசிக் கொன்றுவிடு.


- யுவபாரதி

எப்போதோ எழுதிய கவிதை : 4


ஒவ்வொரு இரவிலும்
உனக்கெனச் சேகரிக்கிற
வார்த்தைகள்
விடியலில் சிவந்துவிடுகின்றன

அத்திப்பழமெனக்
கவ்விச் செல்கின்றன
கிளிகள்.


- யுவபாரதி

எப்போதோ எழுதிய கவிதை : 3


பேச எத்தனிக்கிறேன்

வெயில் விலகாமல்
மழைத் தூறல்

நம் வார்த்தைகளைக்
கற்பிதம் செய்கிறது
வானம்.


- யுவபாரதி

January 24, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 2


ஓட்டமும் நடையுமாய்
என் நோக்கி ஓடிவரும்

அம்மா அழைத்ததும்
கைவிட்டு ஓடிப்போகும்

எதிர்வீட்டுக் குழந்தை

உன்னை நினைவூட்டுகிறது.


- யுவபாரதி

எப்போதோ எழுதிய கவிதை : 1


இங்கு சாதி இல்லை
உனக்குச் சகோதரி இல்லை
அப்பா பயம் இல்லவே இல்லை

என இருந்திருந்தால்

நாம் இருந்திருப்போம்.


- யுவபாரதி

November 16, 2012

அயல் வானம்

1

அப்போது பறவைக்குச்
சிறகுகள் இருந்தன
குச்சிகளாலான கூட்டிற்குக்
கதவுகளும் இல்லை
உறவாக ஒரு வானம்
இருந்தது.

2

விண்ணுரசி வீழ்ந்ததும்
பதறியெடுத்த விரல்களில்
கண்ணயர்ந்தது.

3

விழித்ததும்
சிறகுகளின் இடத்தில்
அதே வண்ணத்தில்
கோடுகள் இருந்தன
கம்பிகளாலான
கதவுகள் தெரிந்தன

வானம்
அயலாகிப் போனது.


- யுவபாரதி