Showing posts with label படகு. Show all posts
Showing posts with label படகு. Show all posts

May 12, 2015

கேளாக் குழல்

இமைதாழ்ந்த உயிரின் சுவாசம்
அறுக்கப்பட்ட மூங்கில் துளை
எழுப்புகிற அன்பின் நெய்தல்
உன் செவியருகில் தவிக்கிறது
நங்கூரம் அறியாத நாட்டுப்படகின்
இருத்தல் வாய்ப்பறுக்கும்
புயல்களின் திசையறியாது
உன் பயண நெடுகை.