Showing posts with label திலீபன். Show all posts
Showing posts with label திலீபன். Show all posts

September 16, 2015

என்னை விடாதீர்கள்


என்னைப் பார்க்கவிடாதீர்கள்
கண்பிடுங்கி சிறைத்தரையில்
வைத்துப் பிதுக்குங்கள்
என்னைக் கேட்கவிடாதீர்கள்
காதறுத்து வான்கோவின்
பக்கத்தில் வையுங்கள்
என்னைப் பேசவிடாதீர்கள்
நாவறுத்து ஒருவிடியலில்
தூக்கிலிடுங்கள்
என்னை உண்ணவிடாதீர்கள்
எல்லாரும் பார்க்க
சாகவிடுங்கள்.