Showing posts with label குரல். Show all posts
Showing posts with label குரல். Show all posts

May 06, 2015

பாழ்குரல்

பாழும் கிணற்றடியில்
தலைசொறிந்து கொண்டிருக்கிறது
தெரிந்தோர் கல்லெறிகிறார்கள்
ரேகைகள் வெடித்த கையோங்கி
துர்ஆவி கண்ட நாய்போல்
தூரத்து ஊளையிடுகிறது
கணந்தோறும் பிய்த்தெறியப்படும் நடுக்கத்துடன்
கம்பூன்றி நகர்கிறது
என் குரல்.