Showing posts with label சுவர். Show all posts
Showing posts with label சுவர். Show all posts

May 12, 2015

நான்காம் சுவர்

ஒற்றைக் கதவும்
நான்காம் சுவரானஉலகிற்குள்
நடைவண்டியோடு சுழன்றவன்
இடறி விழுந்தேன்
சூம்பிய கால்கள்
எழமறுக்கும் இயலாமையைப்
பரிபாஷையில் பகிர்ந்து
இளிக்கின்றன சுவர்கள்
தொண்டை திறக்காத அலறலை
அள்ளி விசிறியதும்
எதிரொலிக்கும் திராணியற்ற
வெட்கத்தில் இற்றுவிழுகின்றன
காத்திருந்த கூரை
சரிந்து உயிர்மூடுகிறது
பின்தொடரும் கால்களுடன்
தலைவாசமிருந்த தனிமை
அடுத்த உடல்தேடி
இறங்குகிறது.


January 18, 2014

நிழல் வலி


வெளியே 

பயண நேரத்து நாய்க்குட்டி
முதுகும் நிமிராது
குரைக்கவும் கூடாது

உள்ளே 

உபரி நேரத்து ஓய்வறை
எங்கும் நகராது
எதிரொலிக்கவும் சுடாது


- யுவபாரதி