Showing posts with label எழுத்து. Show all posts
Showing posts with label எழுத்து. Show all posts

May 09, 2015

விண்ணேற்றம்

நாள்வாரியாக அடுக்கிய தாள்ஒன்றில்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது
மெல்ல வருடியதும் சோம்பலாய்
விழித்து முகம் பார்த்தது
தாள் தரைவீழ அந்தரத்தில்
சொற்களாய் மினுக்குகிறது
கையேந்த எத்தனித்தேன்
மௌன முறுவலிப்புடன்
எழுத்துகளைக் கையளித்து
விண்ணேறிக் கரைகிறது
கவிதை.