Showing posts with label சொல். Show all posts
Showing posts with label சொல். Show all posts

February 22, 2017

சொல்

சொல் நண்ப
சொல்
சொல்லாமல் போனாலும்
சொல்
அழிந்தா போகிறது.

23.01.2017

July 22, 2016

சொல் சபிக்கப்பட்டது

எத்தனை முறை விரட்டியும்
முகம் பார்த்து நிற்கிறது
சொல்

கிழக்குக்கடல் உச்சியில் எறிந்தும்
மேற்குமலை ஆழத்தில் அமிழ்த்தியும்
எதிர்வந்து நிற்கிறது
சொல் சபிக்கப்பட்டது

சிலுவையில் மரித்தவன்
உள்ளங்கைத் துளையில்
ஒளித்து வைத்தும்
தூக்கிட்டுக் கொள்கிறவன்
குரல்வளையிலிருந்து
குதித்து நிற்கிறது
சொல் சாகடிக்கச் சபிக்கப்பட்டது.



11.06.2016

February 19, 2014

சொல் நடை



குத்திக் குத்தி
இரத்தமெலாம் வற்றியதும்
சொல் பெருகியது

வெகுண்டு உதைத்ததில்
சுவரோரம் விழுந்தாலும்
சொல் மண்ணில்லை

கண்ணோடு கலங்கியது
காதோடு வலியேற்றது
கையோடு கெஞ்சியது

காலோடு
தவழ்ந்து போகிறது.


- யுவபாரதி