Showing posts with label நூல் வெளியீட்டு விழா. Show all posts
Showing posts with label நூல் வெளியீட்டு விழா. Show all posts

April 08, 2017

"மண்ணூறப் பெய்த மழை" - நூல் வெளியீடு


அப்பணசாமி, பா.ஜீவசுந்தரி, தி.பரமேசுவரி, யுவபாரதி, சுகிர்தராணி

தி.பரமேசுவரி, யுவபாரதி, சுகிர்தராணி

தி.பரமேசுவரி, யுவபாரதி, சுகிர்தராணி

யுவபாரதி, விசாகன்


































கடந்த சனிக்கிழமையன்று தேனியில் நடைபெற்ற தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் முப்பெரும் விழாவில் எனது அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பான "மண்ணூறப் பெய்த மழை" எனும் நூல் பன்முகம் வெளியீடாக வெளியானது.
நூலைக் கவிஞர் சுகிர்தராணி வெளியிட கவிஞர் தி.பரமேசுவரி பெற்றுக் கொண்டார். தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் பலரும் பங்கேற்ற நிகழ்வில் எனது நூல் வெளியானது மகிழ்ச்சியைத் தந்தது.
இவ்விழாவை ஒருங்கிணைத்தவரும் எனது நூலைப் பன்முகம் வெளியீடாகக் கொண்டுவந்தவருமான தோழர் விசாகனுக்கு நெகிழ்ச்சியோடான நன்றி.

28.02.2017

March 31, 2013

'ஆட்டிசம் : சில புரிதல்கள்' எனும் நூல்



'ஆட்டிசம் விழிப்புணர்வு மாதம்' எனப்படுகிறது ஏப்ரல் மாதம். 

நேற்று தி.நகர் தக்கர் பாபா பள்ளியில் ஒரு நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. தோழர் டி.கே.ரங்கராஜன், மரு. தேவகி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

'ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல, குறைபாடுதான்; நம் நாட்டில் 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், சரியான புள்ளி விவரங்கள் இதுவரை இல்லை' என்ற துவக்க உரையோடு, 'ஆட்டிசம்' எனும் புலனுணர்வு சார்ந்த குறைபாட்டிற்கு உள்ளாகும் குழந்தைகளின் உணர்திறன்கள், அவர்களைப் புரிந்துகொள்வதில் உள்ள சவால்கள், அவர்களது பெற்றோர்களுக்கான சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் என எளிய தமிழில் நண்பர் யெஸ். பாலபாரதி எழுதியுள்ள 'ஆட்டிசம் : சில புரிதல்கள்' எனும் நூல் அது. 

பாரதி புத்தகத்தின் Books for Children வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் விலை ரூ.50 மட்டுமே. 

அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

- யுவபாரதி

September 29, 2011

"அ.மார்க்ஸ் - சில மதிப்பீடுகள்" நூல் வெளியீட்டு விழா - ஒலிப்பதிவு

அ.மார்க்ஸ்
எழுத்தாளர் மீனா தொகுத்த "அ.மார்க்ஸ் - சில மதிப்பீடுகள்" நூல் வெளியீட்டு விழா 18 அக்டோபர் 2010 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.

பல முக்கிய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டளர்கள் கலந்துகொண்டு பேசிய இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.




mp3 வடிவில்...


   



ஒலிப்பதிவு - யுவபாரதி.