Showing posts with label விடியல். Show all posts
Showing posts with label விடியல். Show all posts

January 14, 2017

பகல் எப்போது வரும்

விடிந்துவிட்டதென
கைபேசியில் சொன்னான்
வெளியூர் போய்விட்ட
உள்ளூர் நண்பன்
இன்னும் எனக்கு
குரல்கள் மட்டும் கேட்கின்றன 
முகம் தெரியவில்லை
ஒருவேளை எல்லாரும் 
ஒன்றேபோல் இருக்கலாம்
குப்புறப் படுத்து குரல்விட்டிருக்கலாம்
உறக்கத்தில் கூட புலம்பியிருக்கலாம்
பகல் எப்போது
ஊருக்குள் வரும்.

11.09.2017