Showing posts with label அ.மார்க்ஸ். Show all posts
Showing posts with label அ.மார்க்ஸ். Show all posts

April 08, 2017

"மண்ணூறப் பெய்த மழை" குறித்த முகநூல் குறிப்புகள்

மீரான் மைதீன்
நண்பர் யுவபாரதி மணிகண்டன் கிட்டே அமர்ந்து கதை சொல்வது போல ரசனையோடு பேசும் நூல்.முகப்பூச்சியில்லாத அழகு. பவுடர் கூட போடாத பேரழகு.கட்டுரை நூல் என்கிறார் எனக்கென்னமோ கதையாகவே வாசிப்புக்குட்படுகிறது .அவரின் நிலம் ஓரளவு எனக்கு பரிட்சயமானதாக இருப்பதால் அவரின் கைபிடித்து கூடவே கேட்டுக் கேட்டு நடப்பதில் சுகமுண்டு.வாசகனின் ஞாபகப் பரப்பை அவனுக்குள் உழுது பயிரிடும் தன்மை கொண்டிருக்கிறது. எல்லோருக்குமான நூல். நண்பருக்கு வாழ்த்தும் அன்பும்.
பன்முகம் வெளியீடு 
விலை 40 ருபாய்


- மீரான் மைதீன்
  04.04.2017



அ.மார்க்ஸ்
நண்பர் யுவபாரதி மணிகண்டன் அவரது சமீபத்திய குறு நூலை அனுப்பியிருந்தார். 20 கட்டுரைகள். பெரிய அளவிலான ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. சிறிய வடிவில் அவரது அன்றாட அனுபவங்கள், நினைவுகள் ..இப்படி.

ஒரே மூச்சில் படித்துவிட்டு நான் அவருக்கு அனுப்பிய குறுஞ் செய்தி:

"உங்கள் நூலை அன்றே படித்துவிட்டேன். உடன் பதில் எழுதாமைக்கு மன்னியுங்கள். எல்லோருக்கும் சிறு வயது அநுபவங்கள் என்பன மறக்க இயலாதவை. உங்களின் ஒவ்வொரு அனுபவத்தையும் படிக்கும்போது இணையாக என் அனுபவங்கள் நினைவில் ஓடிக் கொண்டே இருந்தன. பாப்பாநாடு எனும் கிராமத்தில் நான் என் அப்பா, அம்மா,தங்கைகளுடன் நடந்து சென்று டூரிங் தியேட்டரில் சினிமா பார்த்து வந்த நினைவுகளில் இன்னொரு முறை வாழும் அனுபவம் கிட்டியது. நல்ல எழுத்துக்கள் நம்மை அப்படிச் சீண்ட வேண்டும், வருட வேண்டும், நினைவுகளைக் கிளற வேண்டும். நல்லுணர்வுகளைக் கிளர்த்த வேண்டும். உங்கள் எழுத்தில் வெளிப்படும் மிகையின்மையும் உண்மையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. எங்காவது இதைக் குறிப்பிடுவேன். நன்றிகள்.."

எனினும் நூல் வெறும் சிறு வயது அநுபவங்களை மட்டும் பேசுவதல்ல.

'மண்ணூறப் பெய்த மழை' - யுவபாரதி மணிகண்டன். 'பன்முகம்' வெளியீடு (9444409824) பக். 64, ரூ 40/-

- அ.மார்க்ஸ்
   07.03.2017

December 09, 2012

அம்பேத்கர் நினைவு நாள் அரங்கக் கூட்டம் : ஒலிப்பதிவு


கடந்த டிசம்பர் 8 சனிக்கிழமை மாலை  சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் “நந்தன் முதல் நத்தம் வரை : தொடரும் ஆதிக்கச் சாதியின் தீ நாக்குகள்” எனும் தலைப்பில் அம்பேத்கர் நினைவு நாள் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் கட்சியின் சென்னை மாவட்டக் கிளை இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் அருண்சோரி இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த இசையரசு சாதி எதிர்ப்புப் பாடல்கள் பாடினார். எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், பேரா.அ.மார்க்ஸ், தமிழ்நாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி, எஸ்டிபிஐ அமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசைன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன், சிபிஐ (எம்எல்) மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தங்க தமிழ்வேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இசையரசுவின் பாடல்களையும், தோழர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், அ.மார்க்ஸ், செல்வி ஆகியோரது உரைகளையும் கீழ்க்காணும் இணைப்புகளில் கேட்கலாம்.







ஒலிப்பதிவு : யுவபாரதி


(பி.கு.: வேறொரு நிகழ்வில் பங்கேற்கச் செல்ல நேர்ந்ததால், பிறரது உரைகளைப் பதிவு செய்ய இயலவில்லை.)

December 11, 2011

'கேணி'யில் பேரா.அ.மார்க்ஸ் உரை : ஒலிப்பதிவு

அ.மார்க்ஸ்
11/12/2011 ஞாயிறு மாலை சென்னை கே.கே.நகரில் 'கேணி' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சமூக ஆய்வாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பேரா.அ.மார்க்ஸ் பேசினார். உரை மற்றும் உரையாடல் எனும் வடிவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தனது இளமைக்காலம், குடும்பச் சூழல், கல்வி, வாசிப்பு, சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார். பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் தமது கருத்துகளைப் பதிவு செய்தார்.  

முன்னதாகப் பத்திரிகையாளர் ஞாநி வரவேற்றுப் பேசினார்.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஞாநியும்   எழுத்தாளர் பாஸ்கர்சக்தியும் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...



ஒலிப்பதிவு : யுவபாரதி 

October 15, 2011

தமிழகத்தில் மனித உரிமைகள் : கருத்தரங்கம் - ஒலிப்பதிவு

அருள் எழிலன்,பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ்,செல்வராஜ் 
15.10.2011 அன்று காலை சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் "தமிழகத்தில் மனித உரிமைகள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக மீனவர் பிரச்சனைகள் குறித்து பத்திரிகையாளர் அருள் எழிலன், மரண தண்டனை எதிர்ப்பு குறித்து மூத்த எழுத்தாளரும், மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பா.செயப்பிரகாசம், அணுமின் நிலைய எதிர்ப்பு குறித்து கூடங்குளம் அணுமின் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் எக்ஸ்.டி.செல்வராஜ், பரமக்குடி தலித் படுகொலைகள் குறித்து எழுத்தாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸ் ஆகியோர் பேசினர்.

கவிஞர் கவின்மலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவிஞர் தி.பரமேசுவரி, "தடாகம்" அமுதரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.




ஒலிப்பதிவு : யுவபாரதி.

October 07, 2011

போருக்குப் பிந்திய இலங்கையும் தமிழ் ஊடகங்களும் : இலங்கை தினக்குரல் ஆசிரியருடன் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

வீ.தனபால சிங்கம் & அ.மார்க்ஸ் 

''போருக்குப் பிந்திய இலங்கையும் தமிழ் ஊடகங்களும்" என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபால சிங்கம் அவர்களுடனான கலந்துரையாடலை பேரா.அ.மார்க்ஸ் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வு 06.10.2011 அன்று மாலை 6  மணியளவில் சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு முன்பாகப் போருக்குப் பிந்திய தற்போதைய இலங்கையில் தமிழ் ஊடகங்கள் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் குறித்து வீ. தனபால சிங்கம் பேசினார். அது தொடர்பாக அவருடன் நிகழ்ந்த கலந்துரையாடலில் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது. 




ஒலிப்பதிவு - யுவபாரதி 

September 29, 2011

"அ.மார்க்ஸ் - சில மதிப்பீடுகள்" நூல் வெளியீட்டு விழா - ஒலிப்பதிவு

அ.மார்க்ஸ்
எழுத்தாளர் மீனா தொகுத்த "அ.மார்க்ஸ் - சில மதிப்பீடுகள்" நூல் வெளியீட்டு விழா 18 அக்டோபர் 2010 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.

பல முக்கிய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டளர்கள் கலந்துகொண்டு பேசிய இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.




mp3 வடிவில்...


   



ஒலிப்பதிவு - யுவபாரதி.