சகதி ஈரமுமின்றி
கண்மாய் வெடித்திருக்கிறது
கல்லுடைக்கப்
போய்விட்ட
உழவனின் ஏக்கத்தில்
கழனி காய்ந்து
கிடக்கிறது
சதா துடித்துப்
பாடுமென்
தொண்டை நரம்புகளைச்
செரித்துவிட்டேன்
பறவைக்கு மிஞ்சிய
புதரும்
பாம்புக்கு
மிஞ்சிய கல்லிடுக்குமாய்
தவ்வித் தவ்வுகிறேன்
தவளையென.