Showing posts with label மதிவதனி. Show all posts
Showing posts with label மதிவதனி. Show all posts

March 17, 2013

திருப்போரூர் கந்தசாமி கோவில்

திருப்போரூர் கந்தசாமி கோவில்
பக்கத்தில்தான் இருக்கிறது. எத்தனையோ நாளாய் போய்வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் வாய்த்தது. திருப்போரூர் கந்தசாமி கோவில். 

அலுவலக நண்பர் ஒருவரோடு இரு சக்கர ஊர்தியில் போனேன். வழியில்தான் சொன்னார் இன்று ஞாயிற்றுக் கிழமை மட்டுமல்ல, கிருத்திகை என்றும். 

சரியான கூட்டம். கும்பாபிஷேக வேலை வேறு நடந்துகொண்டிருந்தது. சாமி பார்த்துவிட்டுப் பிரகாரம் வர ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டது. பொதுவாக விசேஷ நாட்களிலோ, கூட்டம் நிறைந்த நேரங்களிலோ நான் கோவிலுக்குச் செல்வதில்லை. 

திருப்போரூர் என்றாலே எப்போதும் ஞாபகத்துக்கு வரும். உள்ளே நுழைந்தது முதலே ஓடிக்கொண்டிருந்த அந்நினைவு பிரகாரம் சுற்றும் போது வலுவாக வந்தது. நண்பரிடமும் சொல்லிக்கொண்டே வந்தேன். கோவிலில் வழக்கமாகத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் மண்டபம் வந்து நின்றேன். 


 பிரபாகரன் - மதிவதனி திருமணம்
முப்பது வருஷங்களுக்கு முன்னால் இங்குதானே நடந்தது பிரபாகரன் - மதிவதனி திருமணம்! எப்போதோ ஒரு புத்தகத்தில் பார்த்த அந்தப் புகைப்படம் நினைவில் நிழலாடியது. பாலச்சந்திரனின் முகமும் கூடவே வந்து நெஞ்சை அடைத்தது.