சீதான்ஷு யஷஸ்சந்திரா (குஜராத்தி)
கடல் பார்க்க வேண்டும்
தேவர்களும் அசுரர்களும் கடைவதற்கு முந்தைய
கடல் பார்க்க வேண்டும்
ஆழ்கடல் நெருப்பின் வெளிச்சத்தில்
கடல் பார்க்க வேண்டும்
நீரும் நெருப்பும் பிரிவதில்லை
நனைவதும் காய்வதும் ஒன்றுதான்
கடல் பார்க்க வேண்டும்
கடல்விட்டு மீள்கையில்
கைநிறைய முத்தேந்தி வர
மூழ்குபவனல்ல நான்
கவிஞன்.
கண்களில் கடல் கொண்டு வருவேன்.
ஆங்கிலம் வழி தமிழில் : யுவபாரதி
[சிறந்த குஜராத்திக் கவிஞரும், விமர்சகரும், நாடக ஆசிரியருமான சீதான்ஷு யஷஸ்சந்திரா (பி.1941 ) தனது 'ஜடாயு' கவிதைத் தொகுப்பிற்காக 1987 -ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார். பல நூல்களை எழுதியுள்ள இவர் Encyclopedia of Indian Literature (1977-81) முதன்மை ஆசிரியராகவும், சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்துள்ளார். தற்போது வடோதராவில் வசித்து வருகிறார்.]
1 comment:
மொழிபெயர்ப்பு அருமை
Post a Comment