1
எல்லா
நாளும்
ஒன்றுபோல்தான்
இருக்கிறது
வேறு
வேறு என்கிறோம்.
2
கால்கட்டிய
கயிறு
எம்பி
நடக்கிறது மாடு
ஒட்டிய
வயிறு மூச்சிரைக்கிறது.
3
கதவுக்கும்
திரைச்சீலைக்குமான இடுக்கு
குட்டிப்பூனைக்குப்
போதும்
நான்
எங்கே ஒளிவது.
- யுவபாரதி
No comments:
Post a Comment