January 14, 2017

எல்லாரும் கொல்கிறார்கள்

வேரறுக்கப்பட்டது என் வயல்
வறண்ட அதன் பரப்பில்
நடுக்கம்பின் விறைப்பில் 
தார்ப்பாய் வீடுகள் கவிழ்ந்திருக்கின்றன
மிஞ்சிய மூன்று கல்
நட்டுத் தீயூதுகிறாள்
பகலின் கல்லுடைத்த அன்னை
அந்தியிருட்டு கிழிய
ஊதற்காற்றில் வீறிடுகிற 
குழந்தையை யாருக்குத் தெரியும்
ஊளையிடும் வாகனத்தில்
ஊளையிட்டபடி எல்லாரும்
நெளிந்து நெளிந்து விரைகிறார்கள்.

11.01.2017

No comments: