பொய் சொல்லக்கூடாது
உண்மையும்
சொல்ல முடியாதது
தாளாது நாப்படும் சொற்களை
மவுனத்தால் துச்சம் செய்கிறாய்
வதைப்பாட்டின் ஈன முனகலையும்
நாராசமெனச் செவி மறுத்து
ஆயுதம் செருகுகிறாய்
வாய்த்தனவின் எளிமையோடே
உவகை பூக்கிற ஆன்மாவை
எண்திசை இழுக்க நீளுமுன்
எதிர்பார்ப்பின் ஆழிப் பேரலைகள்
சுழற்றி
எறிகின்றன
வினாச் செடிகள் வேர்விட மறுக்கும்
அதிகாரத்தின் ஆலநிழலில்
கனா வித்துக்கள் புதைந்திருக்கின்றன.
No comments:
Post a Comment