தெகலான் பாகவி, பீமாராவ், திருமாவளவன், சுபவீ, கம்பீரன் |
01.12.2012 மாலை சென்னை எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் "தருமபுரி சாதி தாக்குதல் குறித்த கருத்துப் பகிர்வு" நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சென்னை மாவட்ட விடுதலைக் குயில்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வை விடுதலைக் குயில்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் கம்பீரன் தலைமையேற்றுத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் கடந்த நவம்பர் 7 அன்று, தருமபுரியை அடுத்த நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களிலுள்ள தலித் வீடுகள் ஆதிக்க சாதியினரால் கொள்ளையிடப்பட்டு கொளுத்தப்பட்ட வன்கொடுமையை அடுத்து, அங்கு களஆய்வுக்குச் சென்ற உண்மை அறியும் குழுக்களில் பங்கேற்ற எழுத்தாளர்கள் கு.உமாதேவி, யாழன் ஆதி, கவின்மலர், விஷ்ணுபுரம் சரவணன், நீரை மகேந்திரன் மற்றும் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த ம.மதிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
எஸ்டிபிஐ தெகலான் பாகவி, மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுபவீ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
(இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசியவர்களது உரைகளை mp3 வடிவில் கீழ்க்காணும் இணைப்புகளில் கேட்கலாம்.)
ஒலிப்பதிவு : யுவபாரதி
No comments:
Post a Comment