December 10, 2012

"கேணி" இலக்கியச் சந்திப்பில் ராஜ் கௌதமன் : ஒலிப்பதிவு

ராஜ் கௌதமன்
"கேணி" இலக்கியச் சந்திப்பு ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை  சென்னை கே.கே.நகர் அழகிரிசாமி சாலையிலுள்ள பத்திரிகையாளர் ஞாநி இல்லத்தில் நடைபெறுகிறது. ஞாநியும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் இணைந்து இந்நிகழ்வைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். 

கடந்த 09/12/2012 அன்றைய கேணி இலக்கியச் சந்திப்பில் எழுத்தாளர் ராஜ் கௌதமன் பங்கேற்றுப் பேசினார். அவரது இளமைக் காலம், கல்விச் சூழல், கல்லூரிப் பணி, எழுத்துலகம் என்று தமது வாழ்வனுபவங்கள், நூல் வாசிப்பின் மீதான தனது ஆர்வம், அதன்படி உருவான தம் சிந்தனைகள் என்று அவர்தம் உரையை நிகழ்த்தினார். உரையின் முடிவில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

நிகழ்வில் பங்கேற்ற ராஜ் கௌதமன் அவர்களை ஞாநி வரவேற்றுப் பேசினார்.  பாஸ்கர் சக்தி நன்றி தெரிவித்தார். 

மேற்படி நிகழ்வின் ஒலிப்பதிவைக் கீழ்க்காணும் இணைப்புகளில் mp3 வடிவில் கேட்கலாம்.





ஒலிப்பதிவு : யுவபாரதி

1 comment:

Tamil seiythigal said...

நல்ல ஒரு பயனுள்ள இலக்கிய சந்திப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
மிக்க நன்றி.