“எதார்த்த பௌத்தம்” என்ற தலைப்பில் பல கட்டுரைகளைத்
தொகுத்துத் தந்திருக்கிறார் தோழர் ஸ்டாலின் ராஜாங்கம். ஆழி பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது
இந்நூல். தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றிலும் பௌத்தத்திலும் ஆர்வமுள்ளவர்கள் அவசியம்
படிக்கவேண்டிய புத்தகம் இது.
இன்று
இந்துமதத்தில் வழிபாட்டிலுள்ள பெருந்தெய்வங்கள் மட்டுமின்றி நாட்டுப்புறத் தெய்வங்களில்
பலவும் பௌத்தப் பின்னணி உடையவை என்பதை உரிய தரவுகளோடும் களஆய்வின் மூலமும் வெளிப்படுத்தும்
கட்டுரைகள் இவற்றில் பல. அவ்வகையில், சாத்தன் குறித்த பி.எல்.சாமி, பிரம்மரிஷி பற்றிய
ரவிக்குமார், திரௌபதி குறித்த ஆர்.அழகரசன், மதுரையின் புகழ்பெற்ற பாண்டிமுனி பற்றிய
ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரது கட்டுரைகள் செறிவானவை.
தமிழகத்தின்
தாய்த் தெய்வங்களின் பௌத்தப் பின்புலம், அவற்றின் வடிவம், நம்பிக்கைகள் குறித்த எஸ்.பி.சபாரத்தினத்தின்
கட்டுரையும், தமிழ் மரபில் சைவத்தோடே அடையாளம் காட்டப்பட்டு வரும் பொதிய மலையும் அகத்தியர்
எனும் படிமமும் அடிப்படையில் பௌத்தம் சார்ந்தவை என்று நிறுவும் ஜப்பானிய அறிஞர் ஷு
ஹிகோஷகாவின் கட்டுரையும் மிக முக்கியமானவை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவ்விரு கட்டுரைகளும்
இத்தொகுப்பிற்காகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
(சென்னை
புத்தகக் கண்காட்சி ஆழி பதிப்பகத்தின் கடை எண்.187-ல் இந்நூல் கிடைக்கிறது. விலை ரூ.110.
புத்தகக் கண்காட்சிக்கே உரிய தள்ளுபடி விலையில் கிடைக்கும்.)
1 comment:
மிக அருமையான பகிர்வு, அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள் ..
Post a Comment