கால்
விறைக்கத்
தொடங்கியது
நான்
நகரவில்லை
விரல்
பத்தும் வேராக
தரை
அகழ்ந்து இறங்கியது.
கை
கனக்கத்
தொடங்கியது
நான்
திமிறவில்லை
விரல்
பத்தும் கிளையாக
சுவர்
குடைந்து பரவியது.
தலை
சரியத்
தொடங்கியது
நான்
அசையவில்லை
காது
கன்னம் நரம்பேறி இலைகுலுங்க
கண்
இரண்டும் ஒளியிழந்து பூவீழ
மூளை
உருகி மறைந்தது
மரம்
நிலைக்கத்
தொடங்கினேன்.
- யுவபாரதி
1 comment:
சிந்திக்க வேண்டும்...!
Post a Comment