கதவு சன்னலற்ற வீட்டில்
நான் மட்டும் வாழவில்லை
பகல் புலர் வேளை
எறும்பு
வருகிறது
பசி மறந்த எம் உணவு
கவ்வி
படை காட்டி நடக்கிறது
பகல் உலர் வேளை
குளவி வருகிறது
ஒலி மறந்த எம் காது
குடைந்து
ரீங்காரம்
தூவிப் பறக்கிறது
பகல் உதிர் வேளை
கொசு வருகிறது
உடல் மறந்த எம் குருதி
உண்டு
இருள் வெளியில் மறைகிறது
இரவு புலர் வேளை
பல்லி வருகிறது
தரை விதானம் பக்கச் சுவரென்று
என்னையும்
சுமந்து ஊர்கிறது
கதவு சன்னலற்ற வீட்டில்
நான் மட்டும் வாழவில்லை.
-
யுவபாரதி
No comments:
Post a Comment