February 22, 2017

தலையள்ளிப் போகிறது

கூட்டம் திரண்டிருக்கிறது
கேட்பாரற்றவன்
தன் குரல்வளையிலிருந்து
நறுக்கத் தொடங்குகிறான்
கடைசி கண்ணி அறுபட்டதும்
தலை எம்பிக் குதிக்கிறது
இரு அணிகள் உதைத்து
விளையாடுகின்றன
யார் உதையில்
கடல்குடிக்கப் போகிறதது
உறுமி எழுகிற பேரலை
சிற்றலைகளைத் தள்ளிவிட்டுத்
தலையள்ளிப் போகிறது
நடுக்கடல் அமைதியானது
வற்றும் வரை
நிதானமாய்க் குடி.

27.01.2017

No comments: