புகையும்
உள்ளார்ந்த அழுகையுமாய்
இரவின் ஓலம்
பௌர்ணமிப் பெருவெள்ளம்
நேசம் பூக்கும்
ஜன்னலோரங்களை மூழ்கடித்து
வெற்றுச் சிப்பிகளை
இறைத்துப் போகிறது
விண்ணிலிருந்து ஏந்தித்
தழுவ வந்த கரங்கள்
கால்களில் இடறி
புழுதியில் புரள்கின்றன
காலகதி ஒரு நீர்ப்பாறை
நானும் நீயும் வெள்ளோட்டம்.
No comments:
Post a Comment