பறக்கும் குட்டிமறியை
நேற்று பார்த்தேன்
மேய்ப்பனின் கண்ணில்
எப்படி மண்தூவியது
இந்த சிசு
தின்னத் தெரியா செடி முகர்ந்து
அங்குமிங்கும் ஏன் பறக்கிறது
யார் கண்ட குறுகுறுப்பில்
மேடேறியது
வழிதப்பிய மறிகளில்
மீட்பர்கை சேர்வதெது
மூணாறு பறக்கும் மகிழுந்து
பறக்கவிட்ட குட்டிமறியை
நேற்று பார்த்தேன்.
நேற்று பார்த்தேன்
மேய்ப்பனின் கண்ணில்
எப்படி மண்தூவியது
இந்த சிசு
தின்னத் தெரியா செடி முகர்ந்து
அங்குமிங்கும் ஏன் பறக்கிறது
யார் கண்ட குறுகுறுப்பில்
மேடேறியது
வழிதப்பிய மறிகளில்
மீட்பர்கை சேர்வதெது
மூணாறு பறக்கும் மகிழுந்து
பறக்கவிட்ட குட்டிமறியை
நேற்று பார்த்தேன்.
No comments:
Post a Comment