February 22, 2017

என் சமூகம்

என் சமூகம் 
எனக்கு முன்னே செல்லாது
என்னைப் பின்வரவும் விடாது
எனக்குப் பின்னே வராது
என்னை முன்செல்லவும் விடாது
என்னை நிமிர்த்தியும்
குப்புறத் தள்ளியும்
மிதிக்கும் துவைக்கும் நகரும்
தூக்கி
வெளியேயும் வீசாது.

22.01.2017

No comments: